சோதனைக்குப் பயந்து
2 லட்சம் மதிப்புள்ள பான் பராக் பண்டல்கள் சாலையில் வீச்சு
நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டைப் பக்கம் உள்ள புளியரை கேரள மாநிலம் செல்வதற்கான எல்லைப் பகுதி கேரள மற்றும் தமிழகத்தின் தேவைக்கான பொருட்கள், மற்றும் அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் அன்றாடம் நூற்றுக் கணக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறன்றன. இதனிடையே சரக்கு வாகனங்கள், மற்றும் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளிலும், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டு பிடிபடுவதும் வாடிக்கையாக விட்டது.
இதனிடையே தடைசெய்யப்பட்ட பான்பராக் பண்டல்கள் கடத்தப்படுவதாக கேரள எல்லைப் புற நகரமான ஆரியங்காவு எக்ஸைஸ் போலீசாருக்குத் தகவல் வந்ததையடுத்து நேற்று நள்ளிரவு ஆரியங்காவு – தென்மலைச் சாலையில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் கண்காணிப்பை அறிந்தவர்கள், அவர்களிடம் சிக்கி விடக் கூடாது. என்பதற்காகத் தடை செய்யப்பட்ட பான்பராக் பொட்டலங்களை ஆரியங்காவுச் சாலையில் வீசி விட்டுத் தப்பி்ச் சென்றுள்ளனர். தகவலறிந்த எக்ஸைஸ் போலீசார் அதைக் கைப்பற்றினர்.
சோதனைக்குப் பயந்து சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பான்பராக் பொட்டலங்களைச் சாலையில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். தகவல்களை உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம் என்கிறார்கள் கேரள எல்லைச் சோதனை சாவடியின் எக்ஸைஸ் போலீசார். இது தொடர்பாக தென்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளச் சாலையில் விசப்பட்ட பான்பராக் பொட்டலச் சம்பவம், தமிழக செக் போஸ்ட் அதிகாரிகளையும் பரபரக்க வைத்திருக்கிறது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்