Published on 04/06/2023 | Edited on 04/06/2023

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய 36 வயதான தந்தை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பும் சிறுமியின் தந்தை, மகள் என்றும் பாராமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடல் சோர்வுற்று இருந்த மகளிடம் தாயார் விசாரித்தபோது தான், தனது கணவனே இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தாயார் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருச்செங்கோடு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.