Skip to main content

தந்தை, மகள் கொலை வழக்கு: 3 பேருக்கு தலா இரட்டை ஆயுள்: கோவை கோர்ட்

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
தந்தை, மகள் கொலை வழக்கு: 3 பேருக்கு தலா இரட்டை ஆயுள்: கோவை கோர்ட்

ரு.50ஆயிரம் கடன் தராததால் கோவையில் விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மூத்த மகளை கொலை செய்த வழக்கில் தறி பணியாளர்கள் 3 பேருக்கு தலா இரட்டை ஆயுள், 20 வருட சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை சூலூர் அடுத்த காரம்படி அருகிலுள்ள குமாரப்பாளையம் கிராமத்தில் விசைத்தறி உரிமையாளர் ராக்கியப்பன், அவரது மனைவி சரோஜா, முதல் மகள் வினோதினி, இளைய யசோதா வசித்து வந்தனர். ஒரே கட்டிடத்தில் வீடு, குடோன் நடத்தி வந்த நிலையில், குடோனில் பணியாற்றிய திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார், பரமசிவம், சையது அப்துல் காதர் என்பவர் ரூ.50ஆயிரம் ராக்கியப்பனிடம் கடன் கேட்டுள்ளனர். 

அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்ததாக மூவரும் கடந்த 2014ல் வீட்டில் இருந்த நான்கு போரையும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ராக்கியப்பனும், மூத்த மகள் வினோதினி உயிரிழந்தனர். மனைவி சரோஜா, இளைய மகள் யசோதா காயங்களுடன் உயிர் தப்பினர். இதுதொடர்பாக சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
 
16 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டதுடன், 36ஆவணங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டப்பட்ட உதயகுமார், பரமசிவன், சையது அப்துல் காதர் ஆகிய 3 பேருக்கு 302 கொலை பிரிவில் தலா இரட்டை ஆயுளும், 307 கொலை முயற்சி மற்றும் 449  கொலை செய்யும் முயற்சியுடன் வீட்டிற்குள் நுழைவது ஆகிய இரு பிரிவின் கீழ் 30 ஆண்டு சிறை தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவும், 3 பேருக்கும் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.   

சார்ந்த செய்திகள்