Skip to main content

"உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம்  சார்பாக, "வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு கடந்த  5 ஆண்டுகளாக  நீர்வரத்து இல்லாததால் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் மாற்று பயிர்களான பருத்தி ,  சோளம் சாகுபடி செய்து வந்தனர். சில  மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால்  பாதிப்புகளுக்கு  உள்ளாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த பாசன விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. முடிவில் கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

 

Farmers demand

 

 

இந்த நிகழ்விற்கு வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கினார். சங்கத்தின் நிர்வாகிகள் கோ.பாண்டுரங்கன்(பொருளாளர்), சி.பழனிச்சாமி  (து.செ), பெ.பாலமுருகன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் கிளை நிர்வாகிகள்  குருசாமி ,  கலியன் ,  வீரராஜன்,  செல்வம் ,  பழனிவேல் ,  தனசேகர் , பிரபாகர் , வைத்தியலிங்கம் ,  பொன்மணி உள்ளிட்ட நூற்றுக்கும்  மேற்பட்ட சுற்றுவட்டார விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்