Published on 14/12/2022 | Edited on 14/12/2022
விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் ஆய்வாளர் குமரன் தலைமையில் காவல்துறையினர் திங்கட்கிழமை (டிச. 12) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள மலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
காவல்துறையினரின் விசாரணையில் மது (34) என்ற விவசாயி தனது வயலில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பயிரிடப்பட்டு இருந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுவையும் காவல்துறையினர் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓசூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.