Skip to main content

விவசாய கடன் என்ற பெயரில் மோசடி -சிபிஐ நீதிமன்றம் அதிரடி

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

 

விவசாய கடன் என்ற பெயரில் மோசடி செய்து வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை தண்டனை விதித்து  சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2009 மற்றும் 2010 ஆண்டுகளில் யூனியன் பேங்க ஆப் இந்தியா வங்கியின் திருவண்ணாமலை கிளையில் மேலாராக பணியாற்றி வந்தவர்கள் கண்ணன் மற்றும் காசிநாதன் ஆகியோர் விவசாய கடன், பயிர் கடன், டிராக்டர் வாங்குவதற்கான கடன்களை வழங்குவதாக கூறி விவசாயிகள் போல் சில நபர்களை பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கியிருக்கிறார்கள்.
 

வங்கியின் விதிகள் ஏதும் பின்பற்றாமல் இவ்வாறு கடன் வழங்கியதால் வங்கிக்கு 91 லட்சத்து 30 ஆயிரத்து 634 ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இது குறித்து சிபிஐ லஞ்ச ஒழிப்புதுறை சென்னை 11 வது சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய வங்கி அதிகாரிகள் கண்ணன் மற்றும் காசிநாதன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்தார். 
 

மேலும் கடன் பெறுவதற்காக வங்கி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த போலி விவசாயிகள் 45 பேருக்கு தலா ஒரு வருடம் சிறைத் தண்டனையும், தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்