இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,183 -லிருந்து 4,73,105 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476- லிருந்து 14,894 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685- லிருந்து 2,71,697 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,86,514 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,42,900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,739 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டெல்லியில் 70,390, தமிழகத்தில் 67,468, குஜராத்தில் 28,943, ராஜஸ்தானில் 16,009, மத்திய பிரதேசத்தில் 12,448, உத்தரப்பிரதேசத்தில் 19,557, ஆந்திராவில் 10,331, தெலங்கானாவில் 10,444, கர்நாடகாவில் 10,118, கேரளாவில் 3,603, புதுச்சேரியில் 461 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிகவும் பிரபலமான நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் மிகவும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா. இந்தக் கடையின் உரிமையாளர் ஹரிசிங் சிறுநீரக தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதோடு அவருக்கும் அவரின் மருமகனுக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனை அடுத்து அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்டார் என்று கூறுகின்றனர்.