பிரபல இயக்குனர் ஒருவர் மருத்துவ கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தெறி படத்தில் நடித்த நடிகரின் அருகில் அமர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி நடந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பினீஷ் பாஸ்டின் மற்றும் பிரபல மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் ஆகிய இருவரையும் கல்லூரி நிர்வாகம் ஆகிய இருவரையும் அழைத்துள்ளனர். நடிகர் பினீஷ் பாஸ்டின் ஆக்ஷன் ஹீரோ பைஜூ,டபுள் பேரல், குட்டமாக்கான், கொலுமிட்டாயி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் தெறி படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் நார்த் 24 காதம் என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடப்பதாக இருந்தது. அப்போது கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் நடிகர் பினீஷ் பாஸ்டின் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று நீங்கள் சிறிது நேரம் கழித்து விழாவிற்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் பீனீஷ் பாஸ்டின் 6 மணி ஆகிவிட்டது விழாவிற்கு சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்று கூறியுள்ளார். மீண்டும் அந்த மாணவர் சங்க தலைவர் நடிகரிடம் நீங்கள் கொஞ்சம் லேட்டா வாங்க சார் என்று தெரிவித்துள்ளார். பின்பு ஏன் லேட்டா வர சொல்றிங்க என்று கேட்டுள்ளார். அப்போது சிறப்பு அழைப்பாளராக, இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் வந்திருக்கிறார், அவர் உங்களுடன் ஒரே மேடையில் அமர மறுக்கிறார். அதனால் அவர் சென்ற பின் நீங்கள் வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்பான நடிகர் பினீஷ் பாஸ்டின் அவர்கள் சொன்னதை கேட்காமல் நேராக விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார். அப்போது மேடையில் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும் போது நடிகர் பினீஷ் பாஸ்டின் மேடையில் இருந்த நாற்காலிகளுக்கு எதிரே இருந்த தரையில் அமர்ந்து கொண்டார். இதனால் அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்த நிகழ்வு குறித்து பினீஷ் கூறிய போது, நான் சாதாரண கூலி வேலை செய்து இருந்து நடிகனாக ஆனேன். மேலும் எனது பெயருக்கு பின்னால் மேனன் இல்லை, நான் தேசிய விருதும் வாங்கியதில்லை. ஆனால் நான் உங்களை போல் ஒரு சாதாரண மனிதன். அதனால் தான் மனவேதனையில் தரையில் அமர்ந்து கொண்டேன் என்று தெரிவித்தார். இது பற்றி இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் கூறும் போது, என் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்தவர் அவர் என்னருகே எப்படி உட்காரலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் தெரிவித்த கருத்துக்கு மலையாளத்தில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அனில் ராதாகிருஷ்ண மேனன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.