Skip to main content

காருக்குள் இறந்து கிடந்த குடும்பத்தினர்; நகர சிவமடத்தை தேர்வு செய்தது ஏன்?

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
Family of businessman found dead in car; Why did the city choose the Shiva temple?

 

புதுக்கோட்டையில் சிவமடத்தின் வாசலில் காரில் ஒரு குடும்பத்தினர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சாலையில் நமணசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட இளங்குடிப்பட்டி வயல்வெளியில் உள்ள நகர சிவமடம் எதிரே ஒரு காரில் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 5 பேர் குடும்பத்துடன் இறந்து கிடந்ததுள்ளனர். 

மேலும் அந்த காருக்குள் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தங்கள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அவர்களுக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டும். அதனால் இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பது போல எழுதப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது. அதாவது, தங்கள் உடல்களை நகர சிவமடத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதை தான் அப்படி குறிப்பிட்டு எழுதியதுடன் சிவமடம் அருகிலேயே தற்கொலைக்கான இடத்தையும் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

மேலும் அதே கடிதத்தில் தன்னை இந்த தொழிலுக்குள் கொண்டு வந்து இழப்பு ஏற்பட செய்து மிரட்டல் விடும் சில நபர்கள் என்று சிலரது பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், இறந்த தொழிலதிபர் மணிகண்டன் மனைவி நித்யா பெயரில் புதுக்கோட்டையில் ஒரு ஒயர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்ததா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட சடலங்கள் வியாழக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதா இல்லை அவர்களின் மரண வாக்குமூலமான கடிதத்தில் உள்ளவாறு புதுக்கோட்டையிலேயே அடக்கம் செய்யப்படுமா என்பது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.

சார்ந்த செய்திகள்