வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனது மகளையே பாலியல் வன்புணர்வு செய்தவனை அவனது மனைவி செருப்பால் அடிக்கும் காட்சிகள் என்கிற தலைப்பில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ சுற்றிவருகிறது. அதில் பர்தா போட்ட ஒரு இஸ்லாமிய பெண்மணி ஒருவரை காலணியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக வாணியம்பாடி காவல்நிலையத்தில் தாக்கப்பட்டஅந்த நபர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அதே சமூகவளைத்தத்தில் அவர் பேசுவதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கடந்த ஆகஸ்ட் 2ந் தேதி கபீர், அவரது தம்பி நூர் மேலும் அவரது நண்பர்கள் ஜமால், அமீன், சித்திக், சேட்டு போன்றவர்கள் என்னை அடித்து உதைத்து பாலாற்றில் தூக்கி வீசிவிட்டு சென்றார்கள்.
கபீர் மனைவி துக்னத்பேகத்துடன் நான் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு என்னை அடித்து உதைத்தார்கள். அதோடு மட்டுமின்றி என் மனைவியை கத்தி முனையில் வீட்டில் இருந்து அழைத்து வந்து என்னை செருப்பால் அடிக்க வைத்து அதை வீடீயோ எடுக்கவைத்து அதனை சமூக வளைத்தளங்களில், என் மகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், அதற்காக என்னை தாக்குவதை போன்று போலியாக சித்தரித்துள்ளார்கள். சந்தேகப்பட்டே என்னை தாக்கினார்கள், ஆனால் வீடியோவில் பொய்யாக பதிவிட்டுள்ளார்கள்.
முன்பு இதே கபீர்க்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவு வந்தபோது, நான்தான் முக்கிய பிரமுகர்கள், ஜமாத் ஆட்களுடன் சேர்ந்து பஞ்சாயத்து செய்து பிரச்சனையை தீர்த்துவைத்தேன் என்றார்.
இவர்கள் மீது நான் கடந்த மாதம்மே வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் தந்துள்ளேன். தற்போது வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன். எதனையும் நான் சட்டப்படி சந்திக்க தயாராகவுள்ளேன். அவர்கள் தைரியம்மிருந்தால் சட்டப்படி வந்து என்மீது குற்றச்சாட்டு சொல்லட்டும் என்றவர், இந்த வீடியோக்கள் மூலமாக எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் நான் நடவடிக்கை எடுக்கச்சொல்கிறேன் என்றார்.
என்ன நடந்தது என்பதை காவல்துறை விசாரணை நடத்தி தண்டனை பெறவைக்க வேண்டும். ஏனெனில் சமூகவளைத்தளங்களை சரியாக பயன்படுத்துபவர்கள் லட்சங்களில் இருந்தால் தவறாக பயன்படுத்தி மிரட்டுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதைத்தடுக்க வேண்டும் இல்லையேல் தற்போது உருவாகும் விபரீதங்களை விட பல விபரீதங்கள் ஏற்படும்.