கோவை மாநகர் சொக்கம்புதூரில் பார் வேந்தர் பிரிண்டர்ஸ் பிவிடி.லிட் என்ற இடத்தில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பைசல் (29) குன்ஹாலாவி என்பவரின் மகன் மற்றும் இவரது அண்ணன் மொய்தீன் (38). இருவரும் 1,73,000 ரூபாய்க்கு துணி வியாபாரம் செய்ய துணிகள் பண்டல்களாக பார்சல் செய்து 12 ட 60 G969 இனோவா காரில் கோவையிலிருந்து கேரளாவிற்கு சென்றபோது பின் தொடர்ந்து வந்த - TN 64 C6989 இனோவா லைட் புளு கலர் காரில், வந்த அடையாளம் தெரியாத சிலர் வண்டியை மறித்து தாங்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் என்று கூறி மிரட்டி காரில் சோதனை செய்தபோது, காரில் துணி பண்டல்கள் மட்டும் இருந்துள்ளது.
இவர்கள் மீது சந்தேகம் வந்ததால் காரில் வந்தவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் கூடியதும் கொள்ளையர்கள் வந்த காருடன் தப்பிசென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் தனிபடை அமைத்து, தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.