நெல்லை மாவட்டத்தின் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் சிவ பத்மநாபன். இன்று இரவு ஊத்துமலை திமுக பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் அன்பழகனின் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் தனது காரில் வந்திருக்கிறார்.

அதுசமயம் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது.மேடையில்சிவ பத்மநாபன் அமர்ந்திருந்தார். இந்த பொதுக்கூட்டம் உள்ளூர் திமுக நிர்வாகிகளுக்கு பெரியப்படுத்தாமல் நடத்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் நிர்வாகிகளான மாசெ சிவ பத்மநாபனின் எதிர்தரப்பினர் கூட்ட மேடையின் பின்புறம் நின்றிருந்த மாசெஆதரவாளர்களிடம் லோக்கல் நிர்வாகிகள் இதுதொடர்பான விவரங்கள் கேட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேடை பக்கம் நின்றிருந்த மாசெ சிவ பத்மநாபன் கார் உடைக்கப்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் உள்ளூர் நிர்வாகி பரமசிவன் என்பவரின் மண்டை உடைப்பட்டது. அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கூட்டம் தொடர்ந்து நடையெபெறுகிறது. இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதலுக்கு உட்கட்சி பூசலே காரணம் என சொல்லப்படுகிறது.