விருத்தாசலம் அருகே போலி டாக்டர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் மெடிக்கல் வைத்திருந்த கார்த்திகேயன் (30), அக்குபங்சர் மருத்துவரான இவர் ஆங்கில வைத்தியம் செய்துள்ளார்.
இது குறித்து விருத்தாசலம் தலைமை மருத்துவர் சாமிநாதனுக்கு புகார் வந்ததன் பேரில் சாமி நாதன் தலைமையிலான குழுவினர் விரைந்துச் சென்று விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் ஆங்கில மருத்துவம் பார்த்ததை பார்த்த போது கையும் களவுமாக பிடிப்பட்டார், அவரை டாக்டர் சாமிநாதன் மங்கலம் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்