சென்னையில் உள்ள ராமாபுரம் குறிஞ்சி நகர் பகுதியில் சென்னை பெருநகர மாநகராட்சி, மழைநீர் வடிகால் திட்டத்தைத் தொடங்கியது. இந்த பணிகள் துவங்கப்பட்ட காலத்திலிருந்து பணியானது, விரைவாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெறவில்லை. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கான்கீரீட் மழைநீர் வடிகால் கான்கிரீட் மூன்று அடிக்கு மேல் உயர்த்திக் கட்டப்பட்டதால், மழை பெய்யும் காலங்களில் மழைநீர் வீட்டிற்குள் செல்லாமலும், வீட்டில் உள்ள நீர் வெளியில் செல்லாமலும் உள்ளது. அதன் காரணமாக வீட்டிற்குள் புகுந்த நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் நல்லக்கண்ணு ஐயா அவர்களின் உதவியாளர் அய்யாசாமி கூறுகின்றன. அதே போல் அப்பகுதியில் உயரமான சாக்கடை கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "இந்த திட்டப்பணிகள் நடைபெறும் போது, அதிகாரிகள் மேற்பார்வையிடாதலும், சரியான திட்டமிடுதலும் இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தன. இந்த பிரச்சனை குறித்து சென்னை பெருநகர மாநகராட்சிக்கு ஏழு முறை புகார் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என அய்யாசாமி மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயா அவர்களின் உதவியாளர் அய்யாசாமி அளித்த பேட்டியில் கிண்டியில் உள்ள உதவி பதிவாளர் தமிழ்நாடு உள்ளாட்சிகள் அமைப்பு மன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டவுடன், 20/12/2018 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நேரடியாக ஆஜரானேன்.
ஆனால் எதிர் மனுதாரர், அதாவது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகவில்லை, அவர்கள் சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தினை பெற்றுக்கொண்டேன். அதன் பிறகு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்து பல மாதங்கள் ஆகியும், இது வரை எந்த வித நடவடிக்கையும் இல்லை என கூறினார். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் மழைக்காலம் வந்துவிட்டால், மழைநீர் வீட்டில் இருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால் மீது போட்டப்பட்ட கான்கிரீட்டை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெறவிருந்தது.உடல்நிலை கருதி நல்லக்கண்ணு அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.