Published on 03/01/2020 | Edited on 03/01/2020
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், தற்போதைய நிலவரப்படி (05.30 PM) நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, கோவை, நாகை, கரூர் உள்பட 25 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இன்று (03.01.2020) இரவுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம் (03.01.2020) (05.30 PM)
மாவட்ட கவுன்சிலர் பதவி (512/515)
அதிமுக கூட்டணி- 242
திமுக கூட்டணி- 270
ஒன்றிய கவுன்சிலர் பதவி (5,063/5,067)
அதிமுக கூட்டணி- 2,185
திமுக கூட்டணி- 2,338
அமமுக- 95
நாம் தமிழர்- 1
பிற கட்சிகள்- 444