தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோல்வி அடைந்துள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோற்றுவிட்டது. எடப்பாடி அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை, கல்வி சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறையிலும் படுதோல்வி அடைந்து விட்டது.
அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லை. ஒரு பள்ளியில் கழிவறை இல்லை என்றாலும் அரசு தோல்வி அடைந்தது என அர்த்தம். பள்ளியை சீரமைத்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகபடுத்த வேண்டும். 3 ஆயிரம் பள்ளி மூடப் போவதாக கூறியுள்ளனர்.
அவ்வாறு செய்தால் பாமக மிகப் பெரிய போராட்டம் நடத்தும். இது போல் உயர்கல்வி துறையில் 4247 பணியிடம் நிரப்ப படாமல் உள்ளது. இதனால் அந்த கல்லூரி தரம் சீரழிகிறது.
நெல் கொள்முதல் விலை உயர்தி வழங்க வேண்டும். நெல் கொள்முதல் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் அரசு நிர்ணயத்துள்ள விலையை விட கூடுதலாக உயர்த்தி குறைந்த விலை 2500 ரூபாயாவது வழங்க வேண்டும்.
மேட்டுர் அனை நான்கு முறை நிரம்பியது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை பகுதியில் பயிர்கள் காய்த்துவிட்டதாக விவசாயிகள் போராட்டம் செய்யும் அவலம் உள்ளது என்றார்.