Published on 19/10/2021 | Edited on 19/10/2021

ஃபேஸ்புக்கில் பழகிய இளைஞரைப் பார்க்கவந்த பெண் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் ஃபேஸ்புக் மூலம் பழகிய விஜய் என்ற நபரை ஐஸ்வர்யா என்ற இளம்பெண் பார்க்க வந்துள்ளார். அவரை விஜய் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தாய் என்பதைத் தெரிந்து விஜய் அதிர்ந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து விஜய், அந்தப் பெண்ணைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு அவரின் கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் ஐஸ்வர்யா ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ஆலோசனை மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆலோசனை மையத்திலேயே ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.