கோவை அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
கோவையில் அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கோவையை அடுத்த வடகோவை மேம்பாலம் அருகே அரசு பேருந்து சென்று கொண்டு இருந்த போது, பேருந்தை இரு சக்கர வாகனத்தை வந்த இளைஞர் ஒருவர் முந்தி செல்ல முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பலாத்தின் தடுப்பு சுவரில் வண்டி மோதியதில், தடுமாறி அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். அதில் தலையில் பலத்த காய்மடைந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். செல்வபுரம் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருள்