Skip to main content

கோவையில் டெங்கு: அரசு மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ ஆய்வு

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
கோவையில் டெங்கு: அரசு மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ ஆய்வு

கோவையில் மிக அதிகமாக டெங்கு, பன்றிக்காய்ச்சல், விஷக்காய்ச்சல் பரவிவருவதால், பொதுமக்களில் பலருக்கு மரணமும், கடும் உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுவருகிறது. இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்கள் கோவை அரசு பொதுமருத்துவமனையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை ஆர்.எம்.ஓ. சௌந்தரவேல் அவர்களிடம்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்