அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை பள்ளி துவங்குவதற்கு முன் 15 நிமிடம் உடற்பயிற்சி தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என தெரிவிதித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
— K.A Sengottaiyan (@KASengottaiyan) November 27, 2019
அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும். #TNEducation #TNSports