Published on 02/11/2023 | Edited on 02/11/2023
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு வைராபாளையம் கந்தசாமி வீதியைச் சேர்ந்த மனோகர் மகன் கோபால் (35). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சந்தியா என்ற மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. இதற்காக கோபால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். கோபால் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மோகனப்பிரியா கோபாலை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதில், மனவேதனையடைந்த கோபால் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.