தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயில் பெரும் பங்கு வகிப்பது அரசு மதுபான கடையான டாஸ்மாக் நிர்வாகம் தான் அது தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்ற வாரம் அரசின் மேலிடத்திலிருந்து ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் விவரம் தற்போது 10 மணிநேரம் இயங்குகிற டாஸ்மாக் கடையின் வருமானம் மேலும் இரண்டு மணி நேரம் குறைத்தால் வருவாய் பாதிக்கப்படுமா என்பது தான்.
அரசின் அறிவிப்புக்கு ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களும் பதில் அறிக்கை கொடுத்துள்ளார்கள். அவர்கள் கொடுத்துள்ள விவரம் நேரம் குறைப்பால் பெரிய அளவில் விற்பனை பாதிக்கப்படாது மேலும் பிளாக்கில் விற்பனை கூடும். தற்போதைய நிலையில் பிளாக்கில் விற்பனை செய்வது பெரும்பாலும் அந்தந்த ஊர் ஆளுங்கட்சி நிர்வாகிகள் நியமிக்கும் நபர்கள்தான் ஆகவே ப்ளாக்கில் விற்பனை கூடும்போது கடை விற்பனை சிறிய அளவில் தான் பாதிக்கப்படும்.
காரணம் இந்த விற்பனை அதிகபட்சம் இரண்டிலிருந்து 4% தான் குறையும் ஆனால் விற்பனை நேரத்தை குறைத்தால் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறையும் என்பதோடு மக்களிடமும் அரசுக்கு நல்ல பெயர் ஏற்படும் என ஒவ்வொரு டாஸ்மாக் மேலாளர்களும் தங்கள் கருத்துக்களோடு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.
இந்த அறிக்கையின் படி அரசு உயர் அதிகாரிகளோடு சென்ற வாரம் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது முதலமைச்சரிடம் ஒரு பைல் தயாராக இருப்பதாகவும் அது டாஸ்மாக் கடையின் நேரத்தை தற்போதைய நிலையிலிருந்து இரண்டு மணிநேரம் குறைப்பதும் அதன்படி மதியம் 12 மணிக்கு கடை திறப்பு என்பது இனி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஓரிரு நாட்கள் கழித்து அறிவிக்கலாம் என்ற முடிவில் சீக்ரெட் ஆக இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. டாஸ்மார்க் நேரம் குறைப்பு மக்கள் மத்தியில் இந்த ஆட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்துவதோடு வருகிற இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கை கூட்டலாம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் கணக்கு அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியினரும் இந்த அறிவிப்பை வரவேற்பார்கள் என்பதால் அதிரடியாக இதை தனது கையில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.