வெயிட்டேஜ் முறை ரத்து குறித்து
நவம்பருக்குள் முடிவு தெரிவிக்கப்படும்: செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை ரத்து குறித்து நவம்பருக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என்றும், 2013ல் வெற்றிப்பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெயிட்டேஜ் முறை ரத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் இருவருக்கும் சமமாக 50% என்ற அடிப்படையில் வாய்ப்பு அளிக்கவும் பரிசீலிக்கப்படும் என்றார். காலி பணியிடங்கள் குறித்து தெரியப்படுத்தினால், ரூ.7 ஆயிரத்து 500க்கு தற்காலிக அடிப்படையில் தகுத்திக்கேற்ப ஆசிரியர்கள் நியமிப்பதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறியவர், பழைய கட்டிடங்கள் குறித்த ஆய்வு பணி ஒரு மாதத்தில் துவங்கும் என்றும், அவ்வகையான கட்டிடங்களை இடிப்பதற்கு உள்ளாட்சித் துறை மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவும், பள்ளியில் புதிய கட்டிடங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப கட்டப்படும் என்றார்.
நீட் குறித்து பயிற்சி பெற ஆந்திர மாநிலம் சென்றுள்ள 54 ஆசிரியர்கள் மூலம் மேலும் 3ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியவர், டிசம்பர் மாதத்துக்குள் 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அனைத்தும் கணினி மயம் ஆக்குவதற்கு ரூ.486 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் முதல் வாரத்தில் 2 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் 3ஆயிரம் பள்ளிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
-அருள்