திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் சாலையோரம் உள்ள நிழற்கூடையில் கேட்பார்யின்றி சில மூட்டைகள் இருந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி செய்தியாளர் ஒருவருக்கு தகவல் தந்துள்ளனர்.
அங்கு வந்து, அவர் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அது அரிசி சிப்பங்கள் என தெரியவந்துள்ளது. உடனே இதுப்பற்றி வாணியம்பாடி வட்டாச்சியர்க்கும், காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். உடனே அவர்கள் சம்பவயிடத்திற்கு வந்துள்ளனர்.
முதலில் அந்தயிடத்துக்கு வந்த காவல்துறை அந்த அரிசி சிப்பங்களை ஒரு டாடா ஏசி வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று எடை போட்டது. அது 400 கிலோ என்பதும், அது ரேஷன் அரிசி என்பதும் தெரியவந்தள்ளது. அதனை கைப்பற்றிய போலீஸார், அதை கொண்டு வந்தது யார் ?. எதற்காக அங்கேயே விட்டு சென்றார்கள் என விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் என்பதால் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் தடைப்பட்டு போயிருந்த ரேஷன் அரிசி கடத்தல் தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே மீண்டும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.