Published on 10/10/2022 | Edited on 10/10/2022
சட்டவிரோதமாக இளைஞர்களை பணியின் பேரில் வெளிநாட்டிற்கு அனுப்பும் முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அரசுப் பதிவு பெறாத மற்றும் சட்ட விரோதமான முகவர்கள் சுற்றுலா விசாவில் இளைஞர்களை மியான்மர் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பணிக்கு அழைத்துச் செல்வதுடன், பணிக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுமாறு துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், கம்போடியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கம்போடியாவில் இருந்து மீட்டு அழைத்து வர வேண்டிய நபர்கள் குறித்தும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களைக் குறித்தும் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.