Skip to main content

கல்வி போலவே, மருத்துவத்துறையும் வணிகமயமாகி விட்டது- டாக்டர் நீலகண்டனின் வேதனை பேச்சு

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

கல்வி எப்படி வணிம்மயமாகிவிட்டதோ அதே போல மருத்துவமும் வணிகமயமாகிவிட்டது என்று ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர் வேதனையாக பேசியுள்ளார். 

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் பெண்கள் கூட்டமைப்பு கூட்டம் சி.வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

 

speech

 

திருச்சி சிஎஸ்ஆர் துறை தலைமை அலுவலக திட்ட மேலாளர் ஜி.சந்திரசேகர் தலைமை வகித்து பேசினார். கிளை மேலாளர் சி.சன்னப்பன் வரவேற்றார். வழக்குரைஞர் கா.உத்தமகுமரன், தமிழ்ப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சி.கோவிந்தராசு ஆகியோர் பேசினர். 

 

இதில் எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் து.நீலகண்டன் சிறப்புரையாற்றினார். 

 

"எப்பொழுது ஒரு மனிதனோ, குடும்பமோ நலமாக இருப்பது என்பது, அவர்களைச் சார்ந்த, சுற்றியுள்ள சமூகம் நலமாக இருப்பது என்பது தான். அது தான் ஆரோக்கியமான சமூகம். 

 

நான் ஆரோக்கியமாக இல்லை என்று தான் சொல்ல முடியும். ஏனெனில் என்னைச் சுற்றி உள்ள சமூகம் ஆரோக்கியமாக இல்லை. என்னை சுற்றியுள்ள சமூகம் எப்பொழுது ஆரோக்கியமாக உள்ளதோ... அப்பொழுது தான் நான் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். 

 

பெண்கள் முன்னேறி விட்டதாக சொல்வதெல்லாம் வெறும் வார்த்தைக்காக சொல்வது தான். 70 வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எதற்காக போராடினார்களோ அதே நிலைதான் இன்றைக்கும் உள்ளது. ஆண்களுக்கு நிகராக கூலி பெறுவதற்கே பெண்கள் போராட வேண்டி உள்ளது. இதுவா வளர்ச்சி.? 

 

 

கல்வியை போலவே, இன்றைக்கு மருத்துவத்துறையும் வணிகமயமாகி விட்டது. நானும் மருத்துவர் தான் என்றாலும், இதனை வேதனையோடு, ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். உடற்பயிற்சியோடு, இயற்கை உணவுகள், சிறுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். போதிய அளவில் மருத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்" என்றார். 

 

 

விழாவில்.. பட்டுக்கோட்டை பகுதி மேலாளர் ஜே.ஆர்.ஆதவன், திருச்சி மண்டல சிஎஸ்ஆர் மேலாளர் பி.சந்துரு, மையத் தலைவி பானுமதி ஆகியோர் விளக்கிப் பேசினார். கிளை துணை மேலாளர் கே.மணிகண்டன் நன்றி கூறினார். 

 

 

கூட்டத்தில், நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், அதனைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் 10, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்