உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சட்டகல்லூரியை வருகின்ற மே மாதத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டதிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் 5 வருட படிப்பு, 3 வருட படிப்பு என தனி தனியாக பிரித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய உள்ளனர்.
இதன் தொடர்பாக அங்கு பயிலும் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கல்லூரியிலே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த கல்லூரி மாற்றத்தி்ற்கான முக்கிய காரணம், தற்போது உள்ள கல்லூரியில் மெட்ரோ பாதை அமைக்கும் பணியின் போது விரிசல் ஏற்பட்டதாலும், கல்லூரியை சரிசெய்து தரும்படி மாணவர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பையும் விசாரித்த விசாரணை கமிஷன் உயர்நீதிமன்றமும், சட்டக் கல்லூரியும் ஒரே இடத்தில் இருப்பதால் மாணவர்களிடையே வேறுபாட்டை உருவாக்குவதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கல்லூரியில் பயின்ற இரு பிரிவு மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாலும், இதை தவிர்க்க சென்னைக்கு வெளியே சட்டக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
அந்த பரிந்துரையின் பேரில் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கப்பட்டு 57,17,8000 ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட கல்லூரி வளகாம் 2017 தொடங்கப்பட்டு வகுப்பறைகள் மாதிரி நீதிமன்றம், தேர்வு அறைகள், முதல்வர் மற்றும் பேராசிரியர் அறைகள், மாணவர் சேர்க்கை அலுவலகம், விண்ணப்பப் படிவம், கேள்வித்தாள் பாதுகாப்பு அறைகள், 1 லட்சம் புத்தகங்கள் கொண்ட சட்ட நூலகம் போன்றவை இந்த வளாகத்தில் அமைகிறது.
இந்த கல்லூரி அடுத்தாண்டு மே மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர முடிவெடுத்து அறிக்கையை வெளியிட்டது அரசு. அதன் பேரில் தான் தற்போது கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதுகலை மாணவர் திலகராஜ் கூறுகையில், நாங்கள் கல்லூரியை சீரமைத்து தாருங்கள் என்றுதான் கேட்டோம். ஆனால் இவர்கள் கல்லூரி இடத்தையே மாற்ற உள்ளனர். ஒரு மருத்துவ கல்லூரி மாணவர்கள் எப்படி அதே மருத்துமனையில் படிப்பது சிறந்தது என்பது போல நாங்களும் அப்படித்தான் இங்கு பெரிய வழக்கறிஞர்களின் உதவியை பெற்றும் நேரடியாக ஒருவிசயத்தை கற்றுக்கொள்ளமுடிகிறது. இங்கு இருப்பதை போன்று எங்களுக்கு அங்கு வசதிகள் கிடைக்காது இது ஒட்டுமொத்தமாக ஏமாற்று வேளை இது என்றார்.
காவியா முதலாம் ஆண்டு மாணவி கூறுகையில், இங்கு படிப்பதின் மூலம் எங்களுக்கென்று தனி மதிப்பீடு இருக்கிறது. இந்த கல்லூரி ஏன் இத்துனை வருடமாக இங்கு இயங்கியது அப்படி கல்லூரியை அமைத்தவர்கள் எல்லாம் முட்டாளா இல்லை இங்கு இருக்கும் பயன்களை தெரிந்துதான் உயர்நீதிமன்றத்தில் கல்லூரியை அமைத்துள்ளனர்.
இந்த இடத்தில் பயின்றால் தான் எங்களின் தரம் உயரும் இல்லையேல், ஏதோ தோலான் துரத்தி போல் நாங்களும் படித்துவிட்டு தரம்தாழ்ந்து போகும், நாளை வரும் அடுத்த தலைமுறைகளும் இந்தபயனை அடையவேண்டும். மருத்துவம் போலவே நாங்களும் படிப்பதுதான் சாத்தியமாகும். ஆகையால் கல்லூரி உயர் நீதிமன்றதின் உள்ளே அமைத்துதரவேண்டும் என்று நாங்கள் போராட்டத்தில் நிற்கிறோம்.
இதற்கான முடிவை இந்த அரசு மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடரும். அதுமட்டுமில்லாமல் முன்னால் மாணவர்களையும் அழைத்து நாங்கள் இந்த போராட்டத்தை கையில் எடுப்போம் என்றார்.