Skip to main content

'ஏம்பா முன்னமாதிரி மாத்தி வேற கார்ல ஏத்தி விட்றாத'-அலெர்ட்டான எடப்பாடி பழனிசாமி! 

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Edappadi Palanisamy on alert

 

அண்மையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டபின் வெளியே செல்கையில் உதயநிதியின் காரில் ஏற முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டசபையில் பேசியிருந்த உதயநிதி ஸ்டாலின், 'நீங்கள் என்னுடைய காரை பயன்படுத்திக் கொள்ளலாம்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி 'எங்கப்பா நம்ம கார்' என கேட்க, உதவியாளர் கையை நீட்டினார். 'கரெக்டா ஏத்திவிடு மாத்தி மாத்தி ஏத்தி விட்றபோற  முன்ன மாதிரி' என்று சொல்ல அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்