“எடப்பாடி வச்சி செய்யிறாருடா..”என்று உஷாராகி, விருதுநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையினர் கருணாஸ் விவகாரத்தில், வெகுவாக அடங்கிவிட்டனர். அதற்கான காரணம் இதோ -
கருணாஸ் கைதானதைக் கண்டித்து சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மொத்தம் 57 பேர் கைது செய்யப்பட்டு, அருகில் இருந்த சமூகநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் விடுதலை ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையிலிருந்த அவர்களை, மேலிட உத்தரவு காரணமாக, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துவிட்டனர். அவர்களில் இருவர் கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டனர். இது டி.சி.க்குத் தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால், இரவோடு இரவாக அந்த இருவரையும் தேடிப்பிடித்து புழல் சிறையில் அடைத்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கின்றனர் தேனாம்பேட்டை காக்கிகள்.
கருணாஸுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று யாராவது இனி கிளம்பினால், ஆயத்தமாகவே இருக்கிறது காவல்துறை!