தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்பு அமைச்சர்கள் முதல் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். கட்சி பிரமுகர்கள் அழைப்பு கொடுக்கும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நேரடியாகவே கலந்து கொள்கிறார்.
அந்த வகையில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தன் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக 3 மாதங்களுக்கு முன்பு அழைப்பிதல் கொடுத்தார். அதன் படி இன்று மாலை 3.45க்கு திருச்சிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 6.00 மணிக்கு திருமணமத்தில் கலந்த கொண்டார்.
விழாவை முடித்து விட்டு அவர் மீண்டும் 7.50 விமானத்தில் சென்னை செல்வதாக இருந்தது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் கரூர் அரவாக்குறிச்சியில் இன்று நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து மாலை கரூர் கட்சி பிரமுகர் கருணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் 7.50 விமானத்திற்கு திருச்சிக்கு வருவதாக தகவல் வெளியானது.
தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் ஒரே நேரத்தில் ஒரே விமானத்தில் சங்கடங்களும், பிரச்சனைகளும் வர வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் டென்ஷன் ஆகிய உடனடியாக போலீஸ் அதிகாரிகள் ஸ்டாலின் பயணத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? என திமுகவினரிடம் பேசிப்பார்த்தனர்.
ஆனால் கரூர் செந்தில்பாலாஜியோ எங்கள் தலைவர் ஸ்டாலின் பயணத்திட்டம் 10 நாட்களுக்கு முன்னரே போடப்பட்டு விட்டது என கூறிவிட்டனர். எங்களால் மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக சொல்ல.. இதை உளவுத்துறையின் மூலம் முதல்வர் எடப்பாடியின் காதுக்கு செல்ல, உடனே அவர் வேறு வழியாக தயார் பண்ணுங்க என்று ஸ்டாலினுக்கு வழிவிட்டு வேறு வழியாக பயணத்தை அமைக்க சொல்லியிருக்கிறார்.
இதனால் நிம்மதியடைந்த அதிகாரிகள் முதல்வர் பயணத்திட்டத்தை அதிகாரிகள் மாற்றி அமைத்தனர். திருச்சி நிகழ்ச்சியை முடித்து விட்டு சேலம் வழியாக கோவை சென்று அங்கிருந்து 11 மணி விமானத்தில் சென்னை செல்வதாக மாற்றி இருக்கிறார்கள்.