Published on 25/03/2022 | Edited on 25/03/2022

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம், கே.கீரனூர் பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த திடீர் நில அதிர்வு குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்த நிலையில் கோட்டாட்சியர் சிவகுமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.