தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53- வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தார். மேலும், அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணாவுக்கு மரியாதை செய்தனர்.
நம் கொள்கைத் தலைமகன், ஜனநாயகம் எனும் சக்தியைக் கொண்டு எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று.(1/2)— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 3, 2022
அதன்படி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் அண்ணாவுக்கு மரியாதை செய்தார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் கொள்கைத் தலைமகன், ஜனநாயகம் எனும் சக்தியைக் கொண்டு எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று. அறிஞர் அண்ணா அவர்களின் வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திடவும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திடவும் பாடுபட இந்நாளில் உறுதியேற்றோம்.” என்று பதிவிட்டுள்ளார்.