புதுக்கோட்டையில் போதை ஊசி
புதுக்கோட்டை புதுக்குளம் நகர மக்களின் தாகம் தீர்த்த குளம் இது. கடந்த 15 ஆண்டுகளாக காவிரி தண்ணீர் வரத் தொடங்கியதால் புதுக்குளத்தை பராமரிப்பதை மறந்துவி்டார்கள் நகர அதிகாரிகள். 1.6 கி.மீ. சுற்றளவு கொண்ட குளத்தின் கரையில் நடைபாதை அமைத்து நடை பயிற்ச்சிக்கு செல்கிறார்கள். மதிய நேரத்தில் காதலர்களின் கூடாரமாகிறது. இடைப்பட்ட நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது.
போதை ஊசியும் புதுக்கோட்டையும் என்பது புதிது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே போதை ஊசி பழக்கம் புதுக்கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டது. படித்த இளைஞர்கள், படிக்கும் மாணவர்களும் பல அரசியல்வாதிகளும் கூட போதை ஊசிக்கு அடிமையாகிகிடந்தார்கள். கண்ட இடத்திலும் ஊசிகள் கிடந்தது. பலர் கிரக்கத்தில் கிடந்தார்கள். அதன் பிறகு கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் போதை ஊசி கலாச்சாரம் புதுக்கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டது.
புதுக்கோட்டையின் அழகில் ஒன்றான புதுக்குளத்தின் கரை போதை ஊசிகள் பயன்படுத்தும் இடமாகிவிட்டது வருத்தமளிக்கிறது. குளத்தின் கரையோரங்களில் ஆங்காங்கே ஊசிகளின் கூடுகள். எப்படி இந்த பழக்கத்தில் உள்ளவர்களை மீட்கப் போகிறார்கள் என்று நடை பயிற்சி செல்லும் பலரின் ஆதங்கமாக உள்ளது. இப்பவே நவடிக்கை எடுத்தால் பலரை காப்பாற்றலாம் இல்லை என்றால் போதை ஊசி அடிமைகள் பலர் புதுக்கோட்டை நகர வீதிகளில் மனநோயாளிகளாக திரிவார்கள்.
இரா.பகத்சிங்