பள்ளி கல்லூாி மாணவா்களை குறிவைத்து கஞ்சா ஆசாமிகள் கஞ்சா போன்ற போதை பொருட்களை சப்ளை செய்து வருகின்றனா். இதை தடுக்கும் விதமாக போலீஸ் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாாிகளை கைது செய்து வருகின்றனா். இருப்பினும் நாளுக்கு நாள் கஞ்சா வியாபாாிகளும் அதிகாித்து கொண்டே இருக்கின்றனா்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் 800 க்கு அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 12-ம் வகுப்பு படிக்கும் சில மாணவா்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். இதில் ஒரு கோஷ்டியினர் வெளியில் உள்ள கஞ்சா வியாபாாிகளுடன் தொடா்பு வைத்து கொண்டு அடிக்கடி கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனா். மேலும் பள்ளியில் படிக்கும் சக மாணவிகளையும் அந்த மாணவர்கள் கேலி கிண்டல் செய்வதோடு இரட்டை அர்த்தத்தில் பேசி வருகின்றனர்.
இதை மற்றொரு பிாிவு மாணவா்கள் தட்டி கேட்பதால் அடிக்கடி அந்த இரு கோஷ்டி மாணவா்களிடையே வாய்த்தகராறும், கைகலப்பும் நடப்பது வழக்கம். மேலும் ஆசிாியா்களும் கஞ்சா மாணவர்களை கண்டு பயந்து அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அச்சப்படுவதாக மற்ற மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 11-ம் தேதி மாலை பள்ளி விடுவதற்கு முன் மாணவி ஒருவரைக் கிண்டல் செய்ததை ஓரு பிரிவு மாணவா்கள் தட்டிக்கேட்டுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த எதிா்கோஷ்டி மாணவர்கள் வெளியில் இருந்து கஞ்சா கோஷ்டியைச் சேர்ந்த நாலைந்து பேரை வரவழைத்து அவா்கள் பள்ளிக்குள் புகுந்து மற்ற மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர் மேலும் தடுக்க வந்த ஒரு ஆசிரியரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பி ஒடியுள்ளனா்.
இச்சம்பவம் அறித்து பள்ளிக்கு வந்த நாகா்கோவில் டிஎஸ்பி நவீன்குமாா் மற்றும் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் லீனா விசாரணை மேற்கொண்டு அந்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோா்களையும் பள்ளிக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.