திருப்பூர் பகுதியில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் செந்நிறமாக வந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பே பல நேரங்களில் திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் நுரையுடன் பொங்கும் நீர் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் கழிவுநீரை வெளியேற்றுவதன் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு அடிக்கடி குடிநீர் மாசு கலந்து ரசாயன வாசனையுடன் குடிநீர் குழாய்களில் வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் தண்ணீர் மாசடைந்து மஞ்சள் நிறத்திலும், ஒரு சில இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்திலும் துர்நாற்றத்துடன் வந்த தண்ணீர் அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.