கரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 03- ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் மே 03- க்கு பிறகு ரயில் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ரயில்கள் இயக்கப்பட்டால் ரயில் நிலையங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
அதன்படி, சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் தனிமனித இடைவெளியைக் குறிக்கும் விதமாக நடைமேடைகள் மற்றும் டிக்கெட் வாங்கும் பகுதிகளில் மஞ்சள் நிறக்கோடுகள் வரையும் பணி நடைபெற்றுவருகின்றன.