விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் ஒருவரின் மருத்துவச் செலவுகள் முழுமையாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி ஏற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவருக்குக் கழிவு மற்றும் சிறுநீர் பைகளைப் பொறுத்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் 10,000 ரூபாயை மருத்துவ நிதியுதவியாக வழங்கினார்.
விக்கிரவாண்டி ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். அவர் தி.மு.க. உறுப்பினராகவும் உள்ளார். இவருக்குக் கழிவு மற்றும் சிறுநீர் பைகள் வைக்க வேண்டும். மேலும் அந்தப் பைகள் சென்னையில் தான் கிடைக்கும் என விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். அருள்தாஸின் குடும்பத்தினர் மற்றும் ஒரத்தூர் தி.மு.க.வினர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணியிடம் வாட்சப் மூலம் இத்தகவலை தெரிவித்தனர்.
உடனடியாகக் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் சென்னையில் கழிவு மற்றும் சிறுநீர் பைகளை வாங்க ஏற்பாடு செய்துள்ளார். மருத்துவக் குழுவினர் இன்று சென்னையிலிருந்து தனி வாகனத்தில் வந்து அருதாஸிற்கு கழிவு பைகளைப் பொறுத்தி அதை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் எவ்வாறு பராமரிப்பது என ஆலோசனைகளை வழங்கினார்கள். தற்போது அருள்தாஸ் நலமுடன் உள்ளார்.
கழிவு மற்றும் சிறுநீர் பைகளைப் பொறுத்துவதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்ற கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பொன்.கௌதமசிகாமணிக்கு அருள்தாஸ் மற்றும் அவரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.