Published on 11/10/2022 | Edited on 11/10/2022

மதங்களைப் பற்றி தவறாக சித்தரித்து திரைப்படங்கள் எடுக்க வேண்டாம் என பிரபல சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
'லோக்கல் சரக்கு' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ''சினிமாவில் மதம் புகுத்தப்படுவது தேவையில்லாத ஒன்று. யாருமே தப்பாக மதங்களை பற்றி படம் எடுக்காதீர்கள். ஏனென்றால் எந்த மதத்தை பற்றி தவறாக படம் எடுத்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவன் எங்கேயாவது வளர்ந்து கொண்டே இருப்பான்'' என்றார். அண்மையில் பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் கனல் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.