அதிமுகவுக்கு வரலாறு கிடையாது என திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
அண்மையில் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ''என்னை சின்னவர்... சின்னவர்... என்று அழைக்காதீர்கள். நான் உண்மையாவே சின்னவன்தான் எனவே வேணும்னா சின்னவன்னு அழைங்க. சுந்தர் அண்ணன் இதுவரை 5 முறை சட்டமன்ற உறுப்பினர், எழிலரசன் இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர். நான் இப்பொழுதுதான் முதல் முறை. எனவே சின்னவர்னு சொல்லவேண்டாம். அதைக்கூட விமர்சனம் செய்றாங்க சில வயித்தெரிச்சல் பிடிச்சவங்க. நிறையா பேர் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பிங்க. கடந்த மூன்று நாட்களாக பாத்திருப்பிங்க. அதிமுகவை நாம விமர்சிக்கவே தேவையில்லை. அவங்களே அவங்கள திட்டிக்கிறாங்க, அவங்களுக்குள்ளேயே கல்லடிச்சுக்கிறாங்க. ஏனென்றால் அந்த இயக்கத்திற்கு வரலாறு கிடையாது. நம்ம இயக்கத்துக்குத்தான் அந்த வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு நீங்கதான்'' என்றார்.