Skip to main content

''அதிமுகவில் ஓபிஎஸ் சேர வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்''-கண்டிஷன் போட்ட ராஜன் செல்லப்பா

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

 "Do you want OPS to join AIADMK? Just do this" - Rajan Chellappa sets a condition

 

'அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும்' என அதிமுகவின் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நீங்கள் (ஓபிஎஸ்) அதிமுகவிற்கு இடையூறு பண்ணாதீர்கள். உண்மையிலேயே அதிமுகவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் நினைத்தால் ரகசியமாகச் சொல்லிவிடுங்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என அவசியம் கிடையாது. ஓபிஎஸ் மக்களிடம், பேப்பரில் ஏன் சொல்ல வேண்டும். எத்தனை தடவை அமைச்சர்கள் போய் பேசி அன்றைக்கு நாம் ஒன்றிணைந்தோம். வந்து சேர்ந்தீர்கள். உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைத்தது. துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம். ஒருங்கிணைப்பாளர் ஆனீர்கள். அதேபோல் தனியாக சொல்லி விடுங்க. பொதுவாழ்வில் எனக்கு கஷ்டமாக போய்விட்டது. அதிமுக தொண்டர்களை காப்பாற்றுகிறேன் என பத்திரிகையில் செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் உண்மையிலேயே அதிமுகவில்  சேர வேண்டும், அதிமுக வெற்றிபெற வேண்டும், அதிமுகவை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொள்வதை அவர் சொல்லிவிட வேண்டும். பேப்பரில் செய்தி கொடுத்து தர்மம் வெல்லும்; சூது வெல்லும்; இது வெல்லும்; அது வெல்லும் என்று விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அதிமுக வளர வேண்டும் என நினைத்தால் வழக்கு மன்றத்திற்கு போகவே கூடாது. ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் போய் கேட்டு, 'நல்லா இருக்கிறார் சேர்த்துக்கொள்வோம்' என்று கேட்கிறோம். இதுதான் எங்களால் செய்ய முடிந்த நன்மை. துணிச்சலாக சொல்கிறோம்''என்றார்.

சார்ந்த செய்திகள்