![kadampoor raju](http://image.nakkheeran.in/cdn/farfuture/MiRGjlZIfsIXJxu0fxswiUYZYCSpog4d1J6NDlYbFDM/1540121534/sites/default/files/inline-images/kadambur_raju_0.jpg)
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், 2016-ல் ஆட்சி மாற்றம் வேண்டும் என திமுகவினர் தேர்தலை சந்தித்தார்கள். ஆனால் அம்மா ஆட்சி வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து அவர்கள் கோரிக்கையை நிராகரித்தார்கள்.
திமுகவை போல் மைனாரிட்டி ஆட்சி நடைபெற வில்லை. தமிழகத்தில் மெஜாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கனவு முதல்வராக உள்ள ஸ்டாலின் அம்மா மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாகி விடும் என எண்ணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அவர் எதிர்கட்சி தலைவராக இல்லாமல் எதிரி கட்சி தலைவராக இருப்பதால் ஆட்சி மாற்றம் வரும் என எந்நேரமும் சொல்லிக்கொண்டு வருகிறார்.
2021 வரை அதிமுக ஆட்சி தொடரும். ஐந்து ஆண்டுகளாக எதிர்கட்சி தலைவராக சரியாக செயல்பட்டால் மீண்டும் எதிர்கட்சி தலைவராவார். இல்லாவிட்டால் மக்கள் அவரை முற்றிலும் புறக்கணிப்பார்கள்.
அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவருகிறோம். அம்மா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். மற்றவர்களை பற்றி கவலை இல்லை. திட்டங்களை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
டிடிவி ஆர்ப்பாட்டம் குறித்து கவலை இல்லை. தாங்கள் இருப்பதை காட்டி கொள்ளும் டிடிவி போன்றவர்கள் பற்றி கவலை இல்லை எனக்கூறினார்.