நாத்திகர்களைக்கூட கோயிலுக்குள் அனுமதிக்கலாம் ஆனால் பிறருக்காக வேஷம் போடுபவர்களை எந்த இறைவழிபாட்டு தளத்திற்குள்ளும் அனுமதிக்கக்கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நெற்றியில் திருநீறை இடுவதற்கு அனுமதி அளித்து விட்டு, அதனை அழித்தது சரியல்ல. இதற்காக மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், அறநிலையத்துறை தன்னுடைய ஆலையங்களுக்கும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் தம் தம் வழிப்பாட்டு தளங்களுக்கும் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் இது போல் நாடகம் ஆடுபவர்களை, அவமானப்படுத்துபவர்களை ஆலயத்திற்குள் அல்லது வழிப்பாட்டு தளத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்கின்ற ஒரு ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
நாத்திகர் போனால் கூட, ’எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை அழைத்தார்கள் போனேன்’ என்பவர்கள தாராளமாக போகலாம் தவறில்லை. ஆனால் இந்த வேஷம் போடுபவர்கள், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக வேஷம் போடுபவர்கள் தெய்வத்தை அவமதிக்கக்கூடியவர்கள் எந்த காரணத்தை கொண்டும், எந்த வழிப்பாட்டு தளத்திற்கும் அனுமதிக்கப்படக்கூடாதவர்கள். அந்த பட்டியலில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.