புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவன கடைகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பொறுத்தப்பட்ட மீட்டர்களால் அதிக மின் கட்டணம் வருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் புதியதாக பொறுத்தப்பட்ட சீனா மின் மீட்டரை அகற்றி மீண்டும் பழைய மீட்டரை பொறுத்த வேண்டுமென அதிமுக பேரவையில் வலியுறுத்தி வந்தது.
இதனிடையே இன்று சட்டமன்ற பேரவை கூடுவதற்கு முன்னதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் புதியதாக பொறுத்தப்பட்ட மின் மீட்டரை கொண்டு வந்து தரையில் போட்டு உடைத்து எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் புதுச்சேரி மாநிலத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ள நிலையில்14 ஆயிரம் மதிப்பில் முதற்கட்டமாக 34 ஆயிரம் மீட்டர்கள் சீனாவில் இருந்து பெறப்பட்டு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொறுத்தப்பட்டுள்ளதால் கூடுதலாக மின் கட்டணம் வருவதாக அரசுக்கு தெரிவித்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் சீனாவில் இருந்து வாங்கப்பட்ட சீனா ஸ்மார் மீட்டரில் ஊழல் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.இதானால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.