Skip to main content

காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்



காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் இனி யாரையும் துன்புறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரிகளுக்கு தடங்கலில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை கிரிமினல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இனி வரும் காலங்களில் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு எழுத்துபூர்வமாக ஆஜராக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி அழைக்க வேண்டும். காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் காலஅளவை இனி காவல் நிலைய டைரியில் குறிப்பிட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்