Published on 30/11/2020 | Edited on 30/11/2020
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ஒவ்வொரு மாவட்டமாக பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 30 -ஆம் தேதி (இன்று) ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தொண்டர்கள், பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,
"தற்போதைய அ.தி.மு.க ஆட்சியைப் பொதுமக்கள் விரும்பவில்லை. இந்த ஆட்சியை விரைவில் அனுப்பிவிட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். பொதுமக்களின் எதிர்பார்ப்புபடி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்று, தி.மு.க ஆட்சி அமைப்பது நிச்சயம். மக்களுக்காக, நல்ல திட்டங்களைச் செயல்படுத்த, தி.மு.க காத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.