
பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, 11.4.2018 அன்று பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு, திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், அரசியல் பாகுபாடின்றி தமிழகத்தின் ஒருமித்த குரல் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் திமுக, பாமக சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற முழு அடைப்புப் போராட்டத்திற்கு, தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.