Skip to main content

எது வளர்பிறை? எது தேய்பிறை? சராசரி அறிவுகூட இல்லையா... ஸ்டாலின் கடும் தாக்கு!

Published on 05/01/2020 | Edited on 06/01/2020

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (5.1.2020) 10 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள, ''கலைஞர் கணினி கல்வியகம்'' என்ற பெயரில் படித்த, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த மாணவிகள் 90 பேருக்கு கணினி பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அதேபோல் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலையும் திறந்து வைத்தார்.

 

DMK

 

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது, நமக்கு Equal- லா இருக்கிறார்களாம். யாரு, அதிமுகவுக்கு Equal- லா இருக்கிறார்களாம். அதாவது சரிசமமாக வெற்றி பெற்று வந்து கொண்டிருக்கிறார்களாம். இன்னும் இன்றைக்குக் கூட ஊடகங்களிலே செய்திகள்  வந்து கொண்டிருக்கிறது. 

நான் கேட்கிறேன் என்ன சரிசமம், தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இப்படித்தான் சொன்னார்கள். 40 இடங்களில் போட்டியிட்டோம். பாண்டிச்சேரியும் சேர்த்து 39 இடங்களில் வெற்றி பெற்றோம். அதாவது தேனித்  தொகுதியைத் தவிர்த்து, ஒரே ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 39 இடங்களிலே வெற்றி பெற்ற போதும் பெரிய வெற்றி என்று சொன்னார்களா? இல்லை. அதையும் மூடி மறைத்தார்கள். இப்பவும் என்ன சொல்கிறார்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில், கிராமப்புறப் பகுதிகளில் ஆளுங்கட்சியை விட அதிகமான இடங்களில் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறோம். தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும்.

இதிலே அங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள் பேட்டிக்கொடுக்கிறார்கள். முந்திரிக்கொட்டை அமைச்சரும் பேட்டிக்கொடுக்கிறார்கள், யார் என்பது உங்களுக்கு தெரியும், நான் யார் என்று பெயரையெல்லாம் சொல்லி என்னுடைய கவுரவத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. "வளர்பிறையாம் நாம், அவர்கள் தேய்பிறையாம்" எது வளர்பிறை?, எது தேய்பிறை? இந்த சராசரி அறிவு கூட இல்லை ஒரு அமைச்சருக்கு என்பது தான் வேதனையாக இருக்கிறது.

 

DMK


நான் கேட்கிறேன். இன்றைக்கு ஒன்றிய கவுன்சிலை பொறுத்தவரைக்கும் திமுக வெற்றி பெற்று இருக்கக்கூடிய எண்ணிக்கை எவ்வளவு, ஒன்றிய கவுன்சிலை பொறுத்தவரைக்கும் 2100, தயவுசெய்து கணக்கு போட்டு பாருங்கள் முறையாக அறிவிப்பு வந்திருக்கிறது. அதேபோல் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக 1781, ஆக நாம வெற்றி பெற்றிருப்பது 2100, ஆளுங்கட்சி பெற்றிருப்பது 1781, எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது நமக்கு தெரியும் "தோற்றவர்களையெல்லாம் வெற்றி பெற வைத்தார்கள், வெற்றி பெற்றவர்களையெல்லாம் தோற்கடித்தார்கள் என்றார்."

 

Newstuff

 

சார்ந்த செய்திகள்