
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
சிறைக்கொட்டடியில் கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு அப்பாவி தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் அ.வினோத், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கே.எம்.செரிப், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் செ.முத்துபாண்டியன், நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.