புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மருத்துவர் சி . விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராஜு சத்யன், இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மாநில பாசறை செயலாளர் பரமசிவம், திரைப்பட நடிகரும் அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் ரவி மரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் எஸ் பழனியாண்டி , எஸ்.நாகராஜ் எம் .திருமூர்த்தி, ஏவி. ராஜேந்திரன், முத்தமிழ் , சுப்பையா மாவட்ட கவுன்சிலர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசுகையில், “100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது அது இன்னும் நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் தற்போது வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தில் தினம் தோறும் தொழிலாளர்கள் தவிர்த்து வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கு மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் ஆகியவை திமுக அரசால் முடக்கப்பட்டுள்ளது. 2026 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பது உறுதி. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கடைசி இரண்டு மாதத்தில் தான் ஆட்சியை இழந்தார். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை இழப்பார்கள் என்று யாராவது நினைத்தார்களா..? கடைசியில் அவரும் ஆட்சியை இழந்தார்கள்.
இரண்டு மாசம் பொறுத்துக் கொள்ளுங்கள். திமுகவிற்கு நடக்க வேண்டியது நடக்கும். இந்த தீபாவளி முடிந்து அடுத்த தீபாவளிக்கு வரை பொறுத்து இருங்கள். தாலிக்குத் தங்கம் வரும், காவேரி நீர் வரும், மடிக்கணினி என எல்லா வரும். வீட்டு வரி ஏறிப்போச்சு. கரண்ட் கட் ஆகுது, பால் விலை ஏறிப்போச்சு எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு மகளிருக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் 2500 ரூபாயாக உயர்த்தப்படும். தேர்தல் நேரத்தில் மகளிர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பாதி பேருக்கு கொடுக்கவில்லை; தகுதி இல்லை என்று கூறிவிட்டது. தங்கம் விலை ஒரு லட்ச ரூபாய் வரும் என்ன வளர்ச்சி கண்டுள்ளது தமிழகம்?
அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் ரோட்டில் இறங்கிப் போராடவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பொதுமக்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ரோட்டில் இறங்கிப் போராடிப் பெற்று வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எப்போது வரும் என்று அனைவரும் கேட்கத் தொடங்கிவிட்டனர். திமுக ஏன் வந்தது என்று ஆசிரியர்கள் முதல் அனைவருமே எண்ணத் தொடங்கி விட்டனர். மக்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு; வருகின்ற சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. ஆட்சி மாற்றம் வேண்டுமா? வேண்டாமா?, ஸ்டாலினா? எடப்பாடியா? என்பது தான் 2026 தேர்தலாக இருக்கும். திமுகவால் தனித்து நிற்க முடியுமா? 18 அமாவாசை தான், இந்த ஆட்சி ஒரு முடிவுக்கு வரும்; அதிமுக ஆட்சி வரும். அதிமுக சாகா வரம் கொண்ட இயக்கம்” என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், ஆறுமுகம், ராசு, மாவட்ட பாசறை செயலாளர் ப. கருப்பையா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுமன் காளிதாஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி, புதுக்கோட்டை நகர செயலாளர் பாஸ்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித் குமார், மண்டல செயலாளர் மணிகண்டன், இணைச் செயலாளர் சதீஷ்குமார், உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.