Skip to main content

ஜூன் 21-ல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

dmk party mlas meeting

 

தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் இன்று (18/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் 'கலைஞர் அரங்கில்' நடைபெறும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்